Gingee : செஞ்சி அருகே சாய்ந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம்

144

Gingee :விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சிறுதலைப்பூண்டி வலம்புரி விநாயகர் கோவில் அருகே உள்ள கிணறு ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

பலத்த காற்று வீசும்போது அந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை.

You might also like