PMK: திண்டிவனத்தில் நேற்று பாமகவினர் ஆர்ப்பாட்டம்

PMK: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று பிற்பகல் 2:40 மணியளவில், விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நிர்வாகிகள் தாலுகா அலுவலகம் எதிரில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்காததை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டவுன் டி.எஸ்.பி., பிரகாஷ் தலைமையிலான போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. அதனைத் தொடர்ந்து தயாராக நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் நகர செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் கவிதா உட்பட 9 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.