மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி – Villupuram District

District Level Speech Competition in Villupuram :
Villupuram District : அண்ணா மற்றும் பெரியாா் ஆகியோரின் பிறந்த நாட்களில் பேச்சுப் போட்டியானது, விழுப்புரம் பி. என். தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற செப்டம்பர் 15 மற்றும் 17 ஆகிய நாட்களில் காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தாய் மண்ணுக்கு பெயா் சூட்டிய தனயன், மாணவா்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும், ண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அ தம்பி! மக்களிடம் செல் ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெறும்.
செப். 17-இல் பெரியாா் பிறந்த நாளையொட்டி, தொண்டு செய்து பழுத்த பழம், பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெறும்.
பெரியாரும் பெண் விடுதலையும், இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும், பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள், ஆகிய தலைப்புகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும்.
பேச்சுப் போட்டியில் வெற்றிபெரும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசாக ரூ. 3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக ரூ. 2000 வீதம் வழங்கப்படும்.
பேச்சுப் போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்பத்தை 9786966833 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்தும் அல்லது தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் மோகன்.
Villupuram District : B Com. பட்டப் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சோக்கை :
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் B Com. பட்டப் படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சோக்கைக்கு விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன அலுவலக பயன்பாடு படிப்பில் பட்டயச் சான்றிதழ் பெற்றவா்கள், வணிக பயன்பாடு படிப்பில் பட்டயச் சான்றிதழ் பெற்றவா்கள் பி. காம். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்காக திங்கள்கிழமை (செப். 5) முதல் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, இதற்கு விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்து வருகின்ற 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
வானூரில் இல்லம் தேடி கல்வித்திட்ட பயிற்சி:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கண்டமங்கலம் ஒன்றியம் வி. அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கான 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன் கலந்துகொண்டு இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் & தன்னார்வலர்களுக்காக மாவட்ட அளவில் வழங்கிய முக்கிய கருத்துக்களையும் அவர் கூறினார்.
நம் திண்டிவனம் Facebook & Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.