DMk Booth Agents: செஞ்சியில் திமுக பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம்

111

DMk Booth Agents: செஞ்சியில் கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் கிளை செயலாளர்கள், பூத் ஏஜென்ட் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் அரங்கநேழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், பூத் ஏஜென்ட்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அரசின் சாதனைகளையும், முதலமைச்சரின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

You might also like