Vikkaravandi : திமுக சார்பில் பொதுகூட்டம்

Vikkaravandi : விழுப்புரம் தெற்கு மாவட்ட நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர்.
நகர இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் வரவேற்றார்.