விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு | Villupuram Job News

Villupuram Job News : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இது தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது :
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலராக (தற்காலிகம்) பணிபுரிய நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண், மூன்றாம் பாலினத்தோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணபிக்க தகுதியுடையவர்கள் :
இந்த பணிக்கு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள், என். ஜி. ஓ. , அரசியல் அல்லாதோர் உள்ளிட்டோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் செய்வோர் தங்களின் பெயர், படிப்பு, முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஆகியவற்றை தனித்தாளில் இணைத்து, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைஆகியவைகளின் நகல்களில் சுயகையெழுத்திட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
விண்ணபிக்க கடைசி நாள் :
இதை தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம் முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம்.
அல்லது dlsavillupuram@gmail. com என்ர மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
மேலும் பதிவு அஞ்சல் மூலமாகவும் வரும் 31ம் தேதி மாலை 5: 00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
இதுபோன்ற விழுப்புரம் சார்ந்த வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள நம் திண்டிவனம் இணையதளத்தை Subscribe செய்யுங்கள்.