Mailam: கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

Mailam: விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி சார்பில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு, பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழுப்புரம் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிமுறைகள் குறித்து பேசினார்.
தொழிலதிபர் நாகலட்சுமி, மாணவர்கள் படிக்கும் காலத்தில் போட்டி தேர்வு மற்றும் தொழில், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.