Tindivanam: திண்டிவனத்தில் சாலை மேம்பாட்டு பணி பொறியாளர் ஆய்வு

188

Tindivanam: தமிழகம் முழுவதும் முக்கியமான போக்குவரத்து சாலை சந்திப்புகளில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, திண்டிவனத்திலுள்ள அரசு கல்லுாரி சாலை மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். சாலை மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி செயற்பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

You might also like