Eye Checkup : இலவச கண் பரிசோதனை முகாம்

94

Eye Checkup : திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட், ஓட்டல் ஆரியாஸ், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நேற்று இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது.

ஆரியாஸ் ஓட்டல வளாகத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சிக்கு ஆர்யாஸ் ஓட்டல் நிர்வாக இயக்குனர் முத்துராஜ்குமார் தலைமை தாங்கினார்.

லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் ஆனந்த், ஆனந்தகுமார், கவுன்சிலர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். ஓட்டல் ஆர்யாஸ் நிறுவனர் ராமகிருஷ்ணன் இலவச கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.

இதில் திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சின்னராசு, ரமேஷ், மணி, கலைமணி, குமார், பாரிநாதன், கஸ்துாரி ரங்கன் முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் 400 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

You might also like