Free Vettiand Saree Ready in Tindivanam Taluka : திண்டிவனம் தாலுகாவில் இலவச வேட்டி, சேலை தயார்.

264

Free Vettiand Saree Ready in Tindivanam Taluka : திண்டிவனம் தாலுகாவில் இலவச வேட்டி, சேலை தயார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முதியோர் உதவித் தொகை பெறுபவர்களுக்கு, இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி துவங்க உள்ளது.

தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது, முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

இதேபோல் வரும் தீபாவளி பண்டிகைக்காக, திண்டிவனம் தாலுகா பகுதியில், முதியோர் உதவி தொகை பெறும் பயனாளிகள் 29 ஆயிரத்து 300 பேருக்குத் தேவையான இலவச வேட்டி, சேலை அடங்கிய பண்டல்கள் தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளது.

இவற்றை வருவாய் ஆய்வாளர் மூலம், சம்மந்தபட்ட வி. ஏ. ஓ. , அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது. திண்டிவனம் தாலுகா பகுதியில் உள்ள 174 வருவாய் கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

You might also like