Congress : திண்டிவனத்தில் காங். , சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம்

103

Congress : மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசை புறக்கணிப்பு செய்ததை கண்டித்து, திண்டிவனத்தில் காங். , சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பி. எஸ். என். எல். , அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங். , தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி, பேசினார். திண்டிவனம் நகர தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் கருணாகரன், வட்டார தலைவர்கள் குமார், செல்வம், காத்தவராயன், புவனேஸ்வரன், சூரியமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, ஜானி, ராமமூர்த்தி, வெங்கட், அஜித், ஜெய்கணேஷ், காளியம்மாள், புவனேஸ்வரி, சுரேஷ்பாபு, கண்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You might also like