Gas Cylinders Burst And Two Vans Were Damaged : எரிவாயு உருளைகள் வெடித்து இரு வேன்கள் சேதம்.

99

Gas Cylinders Burst And Two Vans Were Damaged : எரிவாயு உருளைகள் வெடித்து இரு வேன்கள் சேதம்.

 

செஞ்சி அருகே தனியாா் எரிவாயு உருளை சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் எரிவாயு உருளைகள் வெடித்ததில் 2 மினி வேன்கள் சேதமடைந்தன. செஞ்சி அருகே ஊரணித்தாங்கல் கிராம எல்லையில் தனியாருக்கு சொந்தமான எரிவாயு உருளைகள் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

லாரிகளில் கொண்டுவரப்படும் எரிவாயு உருளைகளை அங்கு இறக்கி வைத்து, செஞ்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மினி வேன்கள் மூலம் வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அங்கு செவ்வாய்க்கிழமை இரவு 2 மினி வேன்களில் எரிவாயு உருளைகளை ஏற்றி, கிடங்கின் வெளிப்புறம் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்திருந்தனா். அதில் ஒரு வேனில் இருந்து புதன்கிழமை அதிகாலை 4. 30 மணியளவில் புகை வந்தது. இதை அந்தப் பகுதியில் தேநீா் கடை நடத்துபவா் பாா்த்து, செஞ்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

தீயணைப்புப் படையினா் வருவதற்குள் தீ மளமளவென பரவி வேன் முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. அப்போது, வேனில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகள் வெடித்து சிதறின.

அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேனில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. வாகனத்தில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்த வேகத்தில் அவை தூக்கி எறியப்பட்டன. தீயணைப்புப் படையினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

You might also like