Gingee : சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு

Gingee : சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சர் பங்கேற்பு
Gingee அப்பம்பட்டில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர் மஸ்தான் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
செஞ்சி ஒன்றியம், அப்பம்பட்டில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் வளைகாப்பு விழாவை துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி, பேசினார்.
முன்னதாக செஞ்சி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.
மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பி. டி. ஓ. , கேசவலு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலாஜி, குழந்தைகள் ஒன்றிய கவுன்சிலர்கள் பச்சையப்பன்,
மணி, அலமேலு கிருஷ்ணன், ஞானாம்பாள்பஞ்சமூர்த்தி, தி. மு. க. , நிர்வாகிகள் ஆறுமுகம், வாசு, அய்யாதுரை, மதியழகன், செல்வமணி, கோடீஸ்வரன், இக்பால், பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா நன்றி கூறினார்.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்