செஞ்சி பேரூராட்சி தலைவராக அமைச்சரின் மகன் தேர்வு | Gingee News

1,448

செஞ்சி பேரூராட்சி தலைவராக அமைச்சரின் மகன் தேர்வு :

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மேலும் நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் என நகராட்சி பேரூராட்சி, மாநகராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் துணைத் தலைவர் பதவிகளுக்கான நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். தற்போது செஞ்சி பேரூராட்சி தலைவராக அமைச்சர் மஸ்தானின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செஞ்சி பேரூராட்சியில் மொத்தமாக உள்ள 18 வார்டுகளில் 17 வார்டுகள் திமுக வசம் வந்தன. ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வென்றது குறிப்பிடதக்கது. எனவே பெரும்பான்மையுடன் திமுக பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் மஸ்தானின் அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் கூட்டமானது நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவராக அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சரின் மகன் மொக்தியார் அலி 7வது வார்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் துணைத்தலைவராக 1வது வார்டு கவுன்சிலர் ராஜலட்சுமி செயல் மணி தேர்வு செய்யப்பட்டார். இருவரும் ஒருமனதாக தேர்வு போட்டி இன்றி செய்யப்பட்டனர்.

மேலும் 9:30 மணிக்கு செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

துணைத் தலைவர் தேர்தலில் ராஜலட்சுமி செயல்மணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தி. மு. க. , மகளிர் அணி சைதானிபி மஸ்தான், முன்னாள் எம். எல். ஏ. , செந்தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை உட்பட பலர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

மேலும் செஞ்சி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி வருகின்ற 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால் செஞ்சியை சேர்ந்த திமுக கட்சி தொண்டர்கள் மிகுந்த மகிழ்சியில் உள்ளனர்.

விக்கிரவாண்டியில் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு :

விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படனர். விக்கிரவாண்டி பேரூராட்சியில் மொத்தமாக 15 வார்டுகள் உள்ளன. இது வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு கடந்த 2ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றது.

நேற்று காலை நடந்த தலைவர் துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த 11வது வார்டு கவுன்சிலர் அப்துல் சலாம் போட்டியின்றி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த மறைமுக தேர்தலானது அலுவலர் அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுன்சிலர் பாலாஜி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் 8வது வார்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அமைச்சர் பொன்முடி, புகழேந்தி எம். எல். ஏ. , மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் எம். எல். ஏ. , புஷ்பராஜ் உட்பட பலர் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

இதனால் விக்கிரவாண்டி சேர்ந்த திமுக கட்சி தொண்டர்கள் மிகுந்த மகிழ்சியில் உள்ளனர்.

You might also like