செஞ்சியில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி கைது | Gingee News

Gingee News Latest News in tamil :
செஞ்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி கைது:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருமணமான கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் இறந்த நிலையில் தந்தை மற்றும் தம்பியுடன் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் அருள் என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மேலும் இத்தகவலை வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார்.
சிறுமி இதனை அவரது வீட்டில் உள்ள உரவினர்களிடம் கூறியுள்ளார். சிறுமியின் உறவினர்கள் செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரம் செய்த அருளை கைது செய்தனர். கூளி தொழிலாளியான அருள் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட கூளி தொழிலாளியான அருளுக்கு தக்க தண்டணை வாங்கி தரவேண்டு என பாதிக்கப்பட்ட சிறுமியின் உரவினர்கள் போலீசாரிடம் முறையிட்டுள்ளனர்.
செஞ்சி அருகே வயிற்று வலி காரணமாக விவசாயி தற்கொலை.
செஞ்சியில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷ விதையை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செஞ்சியை அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த வடிவேலு மகன் சதீஷ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவருக்கு வயது 35.
ஆறு மாதங்களாகவே வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ள சதீஷ் இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்துள்ளார். இருப்பினும் அதிக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த சதீஷ் அவரது நிலத்தில் விஷ விதையை தின்று மயங்கி கிடந்துள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த சதீஷை அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் போகும் வழியிலேயே சதீஷ் இறந்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செஞ்சியில் நாளைய மின் நிறுத்த விவரம்.
தாயனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை செஞ்சியை சுற்றி உள்ள ஒரு சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயனுார், மேல்மலையனுார். தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல்பாப்பாம்பாடி, நாரணமங்கலம், மேல்வயலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணாமந்தல், எதப்பட்டு.
ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.