Gold Rate Hike: மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு

67

Gold Rate Hike: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

 

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்பட்டது. அட்சய திருதியை நெருங்கி வரும் தருணத்தில் விலை சரிவு பெண்களுக்கு ஆறுதல் இருப்பதாக இருந்தது.

 

இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மீண்டும் மாற்றமும், ஏற்றமும் காணப்படுகிறது. ஒரு சவரன் ரூ.520 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ. 8290 ஆக இருக்கிறது. ஒரு சவரன் ரூ.66,320 ஆக விற்பனையாகிறது.

You might also like