Gold Rate: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலையால் பெண்கள் அதிர்ச்சி; சவரனுக்கு ரூ.1760 உயர்வு

335

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1760 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆபரணத் தங்கத்தின் விலையில் அண்மைக்காலமாக ஏற்ற, இறக்கங்கள் நிலவின.

 

தொடர்ந்து சிலநாட்களில் ஏறுவதும், அதன் பின்னர் சிறிது இறங்குவதுமாக விலை நிலவரம் இருந்து வந்தது.

 

இந் நிலையில் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1760 உயர்ந்துள்ளது.

 

அதன்படி ஒரு சவரன் ரூ. 71,440 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு கிராம் ரூ.220 உயர்ந்து ரூ.8930 ஆக இருக்கிறது. இதன் மூலம் ஒரு சவரன் விலை ரூ.71,000த்தை மீண்டும் தாண்டியுள்ளது.

 

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1760 உயர்ந்துள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

You might also like