Government Schools : அரசுபள்ளியில் 1. 5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி.

315

Government Schools : அரசுபள்ளியில் 1. 5 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 1 கோடியே 27 லட்சம் செலவில் புதிதாக வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

இதற்கு திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பரிதி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து வகுப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்து அதைத் தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்டு ரூ. 60 கோடி மதிப்பில் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்ததுடன், அங்கிருந்த நோயாளிகளிடம் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

மேலும் கட்டுமான பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி மற்றும் டாக்டர் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் அறிவுறுத்தினார். பூமி பூஜை நிகழ்ச்சி மற்றும் ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

You might also like