Govt Girls Hostel Construction Work Started : அரசு மாணவிகள் விடுதி கட்டுமானப் பணி தொடக்கம்.

Govt Girls Hostel Construction Work Started : அரசு மாணவிகள் விடுதி கட்டுமானப் பணி தொடக்கம்.
செஞ்சியில் அரசு மாணவிகள் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. செஞ்சி பெரியகரத்தில் இருந்த மாணவிகள் விடுதி பழுதடைந்ததால் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதனை தொடா்ந்து, தாட்கோ திட்டத்தின் கீழ் மாணவிகள் தங்கும் வகையில் ரூ. 5. 58 லட்சத்தில் புதிய விடுதி கட்டடம் கட்டுவதற்காக புதன்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.
செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் தலைமை வகித்தாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா். விஜயகுமாா், வல்லம் ஒன்றியக்குழு தலைவா் அமுதா ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சி அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதி காப்பாளா் கவிதா வரவேற்றாா்.
நிகழ்வில், வல்லம் மத்திய ஒன்றிய செயலா் இளம்வழுதி, நகர செயலா் காா்த்திக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அரங்க. ஏழுமலை, தாட்கோ செயற்பொறியாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.