villupuram: அனைத்து ஊராட்சிகளிலும் 23ம் தேதி கிராம சபை கூட்டம்

villupuram: கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், வரும் 23ம் தேதி ஊராட்சி தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தல். துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜூவன்,ஜீவன், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு, கிராம மக்கள் வாழ்வாதாரம் தொடர்பான விபரங்கள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, பொது மக்கள் கிராம சபையில் பெருமளவில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.