முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா? Hair Growth Tips

முடி ரொம்ப அடர்த்தியா வளரணுமா? Hair Growth Tips :
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்குமே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வது தான்.
மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை, போதிய ஊட்டச்சத்து இன்மை இப்படி முடி கொட்டுவதை அதிகரிக்க பல காரணங்கள் இருந்தும் அவைகளின் கூடவே தரமற்ற ஷாம்புகளையும் போட்டு இன்னும் முடி உதிர்வை அதிகமாக்கிக் கொள்கிறோம்.
இந்த முடி உதிர்வை எப்படி தடுப்பது ? மேலும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய வேறு வழியே இல்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறைகளை தான் நாம் பின்பற்ற வேண்டும்.
Tips 1 :
வெங்காயத்தைப் பொடியாக நன்றாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் அவற்றை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை ஆரவைக்க வேண்டும். அந்த தண்ணீரில் வெங்காயத்தின் சாறானது நன்கு இறங்கிய பின்னர் அதனை தலையில் தேய்த்து மசாஜ் செய்து தண்ணீரில் அலசினால் முடி அடர்த்தியாக வளரும்.

வெங்காயத்தில் உள்ள சல்பரானது நம் முடியின் வேருக்கு சென்று அதற்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
இந்த முறைக்கு பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய இரண்டுமே பயன்படுத்தலாம்.
அவை இரண்டிலும் ஒரே ஊட்டச்சத்துக்கள் தான் இருக்கின்றன. ஆனால் சின்ன வெங்காயத்தில் மட்டும் சல்பரின் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
எனவே சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி இன்னும் அதிக நன்மைகளைப் பெறலாம்.
Tips 2 :
Hair Growth Tips : முடியை வளரவைக்க மற்றொரு முறை உருளைக் கிழங்கை நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிடாமல் அதை ஆறவைக்க வேண்டும்.
அதனை கொண்டு தலைமுடி அலசப் பயன்படுத்துங்கள். உருளைக் கிழங்கில் உள்ள புரோட்டீனும் ஸ்டார்ச்சும் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டிம் தண்மை கொண்டவை. அதனால் அது முடியை அடர்த்தியாக வளரச் செய்யும்.
உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்சானாது முடிக்கு பொலிவையும் பளபளப்பையும் தரும் தன்மை கொண்டது.
முடி வறட்சியையும் அது தடுக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷ்னராகவும் செயல்படுகிறது.
ஷாம்பு போட்டு தலை குளித்த பின்னர் உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரில் தலையை அலச வேண்டும். பின்னர் வெறும் தண்ணீர் ஊற்றி தலை முடியை அலசிக் கொள்ளவும்.