Tindivanam | இறந்த மனைவியின் சடலத்தை வீட்டிற்குள் புதைக்க முயற்சி

Tindivanam அருகே பரபரப்பு
Tindivanam அருகே இறந்த தன் மனைவியை வீட்டின் அருகிலேயே புதைக்க பள்ளம் தோன்டியதால் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து நள்ளிரவில் பொதுமக்கள் காவல்துறையினரின் உதவியுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் காரணமாக ஏரிக்கரை பகுதியில் புதைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டு புதைக்கும் பணி நடந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் அடுத்த மானூர் பகுதியை சேர்ந்த முதியவர் அப்பகுதியில் சாமியாராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 3. 30 மணி அளவில் அவரது மனைவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவரது உடலை அவர் குடியிருந்து வரும் வீட்டின் அருகிலேயே பள்ளம் தோண்டி அடக்கம் செய்வதற்காக ஏற்பாடு செய்தார்.
அங்கு சிமெண்ட் மூட்டைகள் செங்கற்கள் மற்றும் உப்பு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன .
இது குறித்து தகவலறிந்த ஊர் பொதுமக்கள் வீட்டின் அருகே சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேல்ம் சாமியாருடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவ்விடத்திற்கு தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் நடந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வராததால் மீண்டும் இன்று காலை வருவாய்த்துறையினர் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
முடிவில் இறந்த மூதாட்டியின் உடலை புதைக்க ஏரிக்கரையில் இடத்தை தேர்வு செய்து சடலம் புதைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டது.
பின்னர் இறந்த மூதாட்டியின் உடல் கொண்டுவரப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அவ்விடத்தில் புதைக்கப்பட்டது.
நம் திண்டிவனம் Facebook & Instagram
பக்கங்களை Follow செய்யுங்கள்.