Molasur: திண்டிவனம் அருகே சட்டவிரோத கேம் சென்டருக்கு சீல்

Molasur: சென்னை, துரைபாக்கத்தைச் சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் மொளசூரில், விதுரா கேம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு, சட்டத்திற்கு புறம்பாக சூதாட்டம், மது பாட்டில், புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனை நடப்பதாக கிளியனுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாலமுரளி, மொளசூர் வி.ஏ.ஓ. ராஜ்மோகன் மற்றும் போலீசார் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது, அனுமதியும் பெறாமல், சட்டத்துக்கு புறம்பாக கேம்ஸ் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.