Veedur Dam : வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

209

Veedur Dam : விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், செஞ்சி, மேல்மலையனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதனால் வராக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதனால், வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12: 00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடி (32 அடி) 147. 805 மில்லியன் கன அடி (23 அடி) நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை நிரம்பி வருவதால் அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like