Cricket : இந்திய அணி அபார வெற்றி

Cricket : ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 234 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவேஷ் கான் 3, முகேஷ் 3, பிஷ்னோய் 2, சுந்தர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணியில் அதிகப்பட்சமாக வீஸ்லி 43, லூக் 33 ரன்களையும் எடுத்தனர்.