Minister Ponmudi : அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை

Minister Ponmudi : விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன். கவுதமசிகாமணி உள்பட8பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக் குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய கோபிநாதன், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேர் ஆஜராகினர். மேலும் அரசு தரப்பில் 36-வது சாட்சியாக ஓய்வுபெற்றதுணை போலீஸ் சூப்பிரண்டுசேகர், நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது சம்பவத் தன்று தான், விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப் பிரண்டாக பணியாற்றியபோது, அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தியதாகவும், அப்போது அவருடைய மனைவி வீட்டில் இருந்ததாகவும், சோதனையின் முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் சாட்சியம் அளித்தார். இந்த சாட்சியத்தை பதிவு செய்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இதன் வழக்கு விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என உத்தரவிட்டார்