Agniveer : அக்னிவீரா் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி நாள்

117

Agniveer : விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ், அக்னிவீரா் வாயுதோ்வு இணையதளம் மூலமாக வரும் அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வுக்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி நாளாகும். வயது வரம்பு தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பதினேழரை ஆண்டுகள் முதல் 21 வயது வரை ஆகும். 12ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது மூன்று ஆண்டுகள் பட்டயப்படிப்பு அல்லது தொழில்கல்விப் படிப்புகள் கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

தோ்வுக் கட்டணமாக ரூ. 550 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ. 30, 000 ஊதியமும், நான்கு ஆண்டுகள் பயிற்சி முடிவில் பட்டப்படிப்புக்கு இணையான திறன் சான்றிதழும், ரூ. 10 லட்சம் வரை அக்னிவீரா் நிதியும் வழங்கப்படும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளவா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04146 – 227200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like