Koovagam Koothandavar Kovil: கூத்தாண்டவர் கோயில் தேர்!! குவியல் குவியலாக கற்பூரம் கொளுத்தி கும்மியடித்த திருநங்கைகள்

Koovagam Koothandavar Kovil: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 29ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வரும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும், வெளிநாட்டைச் சேர்ந்த திருநங்கைகளும் கலந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும், அரவானை கணவனாக பாவித்து மணப்பெண் கோலத்தில் வந்து பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டு அரவானை கணவனாக ஏற்றுக் கொண்டனர். அதன் பின் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி மகிழ்ந்தனர்.