Viduthali siruthaigal: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உண்ணாவிரதம்

119

Viduthali siruthaigal: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கடப்பேரிக்குப்பம் அம்பேத்கர் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடப்பேரிக்குப்பம் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின்னழுத்த கம்பிகளை அகற்ற வேண்டும். 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் முழக்கமிட்டனர்.

விசிக மற்றும் கடப்பேரிக்குப்பம் கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மின்சாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்துக்கு விசிக ஒன்றிய துணைச் செயலர் நா. விஜயன் (எ) வீரத்தமிழன் தலைமை வகித்தார்.

விழுப்புரம் தென் கிழக்கு மாவட்டச் செயலர் வீர பொன்னிவளவன் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். கட்சியைச் சேர்ந்த கரிகாலன், செல்வமணி, தமிழ்வளவன், ஆறுமுகம், கவிவளவன், நெடுஞ்செழியன், ரா. சந்தியா மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொண்டனர்.

You might also like