மயிலம் அருகே கல்விசீர் வழங்கும் விழா

திண்டிவனம் அருகே உள்ள மயிலம் அடுத்த கீழ் அடையாளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் திரு கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.
மேலும் பாஸ்கரன் கல்வி அறக்கட்டளை சார்பில் நிறுவனர் அபூபக்கர் சித்திக், இயக்குனர் கண்ணன் ஆகியோர் சார்பில் பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக நவீனமயமாக்கும் செயல்முறைகளை குறித்து பேசினர்.
மேலும் நவீனமயமாக்கும் வகையில் அந்த பள்ளிக்கு தேவையான பொருட்களை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேர்மேன் தயாளன் பழனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்
இந்த நிகழ்ச்சியானது அங்குள்ள மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு பள்ளிகளை இவ்வாறு தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்துவதில் பொது மக்களுக்கும் அதிக பங்குண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அங்குள்ள பொதுமக்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.