villupuram : மல்லர் கம்ப வீரர்கள் சாகசம்

150

villupuram : விழுப்புரத்தில் ஒரே நேரத்தில் 100 மல்லர் கம்பங்களில், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 1000 மல்லர் கம்ப வீரர்கள் சாகச நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, மல்லர் கம்பம் விளையாட்டை நிறுவிய தலைவர் உலகதுரையின் 85ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, விழுப்புரத்தில் 100 மல்லர் கம்பங்களை நட்டு, ஒரே நேரத்தில் 1000 மல்லர் கம்ப வீரர்கள் சாகச நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மல்லர் கம்ப கழக பொதுச்செயலாளர் துரை செந்தில்குமார் வரவேற்றார்.

தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக புரவலர் கவுதம சிகாமணி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சுஜாதா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க இணை செயலாளர் பாலாஜி, தமிழ்நாடு மல்லர் கம்ப கழக துணைத் தலைவர் சின்ராஜ் தலைமை தாங்கினர்.

You might also like