Vikravandi: விக்கிரவாண்டி அருகே குட்கா பாக்கெட்டுகளை கடத்திய நபர் கைது

83

Vikravandi: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பனையபுரம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தினர்.

வாலிபர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் சென்றதால், போலீசார் துரத்தி பிடித்தனர்.

விசாரணையில், சிந்தாமணியை சேர்ந்த சிவக்குமார், 40; என்பதும், ஸ்கூட்டரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 309 ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பாக்கெட்டுகள் கடத்தி செல்வதும் தெரியவந்தது. விக்கிரவாண்டி போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

 

You might also like