25 மாதங்களுக்கு பிறகு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் | Gingee News

613

25 மாதங்களுக்கு பிறகு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்

Gingee News : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த இருபத்தி ஐந்து மாதங்களாக ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாமல் இருந்தது.

கொரோனா காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வெளிப்பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு செய்யப்படும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாமல் இருந்தது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் தமிழக அரசின் புதிய கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடந்த 1ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மாசி பெருவிழா மேல்மலையனூரில் விமர்சியாக நடைபெற்றது.

தற்போது மாதந்தோறும் அமாவாசை விழா அன்று இரவு வெளிப்பிரகாரத்தில் அம்மனுக்கு செய்யப்படும் ஊஞ்சல் உற்சவம் நடத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனையடுத்து நாளை மறுநாள் வியாழக்கிழமை அமாவாசையன்று வெளிப்பிரகாரத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

25 மாதங்களுக்கு பிறகு அம்மனுக்கு வெளிப்பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடை பெறுவதால் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த விழாவின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். இந்த செய்தியால் மேல்மலையனூர் அம்மன் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

செஞ்சியில் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு :

Gingee News : செஞ்சியில் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. செஞ்சியை அடுத்த சந்தைமேட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் பஜனை மண்டபம் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஐயப்பன் கோவிலில் பஜனை மண்டபத்தின் மேற்கூரையானது சேதமானது. அதனையடுத்து ஐயப்பன் பக்தர்கள் திருப்பணிகள் செய்து நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

gingee iyappan temple news

காலை 4 மணியளவில் கலச பிரதிஷ்டை செய்து மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை அடுத்து 6 மணிக்கு மகா பூர்ணாஹூதி யும் கலச நீர் கொண்டு ஐயப்பனுக்கு வழிபாடு நடைபெற்றது.

இந்த விழாவின்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமானது வழங்கப்பட்டது.

இதனால் ஐயப்பன் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

 

You might also like