ADMK : அதிமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

ADMK : விழுப்புரம் மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் ஆலோசனைப்படி, விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் முண்டியம்பாக்கம் ஊராட்சி கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் பி. டி. முகுந்தன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.