மயிலம் அருகே மினி லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து | Mailam News

591

திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே மினி லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் அஜித்.

இவர் நேற்று மினி லாரியை சரக்குட ஜக்காம்பேட்டையிலிருந்து சிங்கனுாருக்கு ஓட்டிச் சென்றார். சப் கலெக்டர் அலுவலகம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது, மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் மினி லாரியை ஓட்டிச் சென்ற அஜித் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வேறுயாருக்கும் அடிபடவில்லை

இந்த மினி லாரி கவிழ்ந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

You might also like