திண்டிவனத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா | Tindivanam News

ஜெயபுரத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா | Tindivanam News
திண்டிவனத்தில் உள்ள ஜெயபுரம் பகுதியில் முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
திண்டிவனம் அருகிலுள்ள 25வது வார்டு திமுக சார்பில் இந்த விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் தலைமை தாங்கினார். 25வது வார்டு திமுக கவுன்சிலர் ரேகா நந்தகுமார் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு பிரமுகர்கள் நந்தகுமார், நல்லாவூர் பிரபு, கிளைச் செயலாளர் சாமி, நெடிசுப்ரமணியன், லுார்துசாமி, புருஷோத்தமன், தமிழ்ச்செல்வன், ரமேஷ், விஜயராகவன், மகளிர் அணி ஜெயா, ராஜா, கோவடி கவுன்சிலர் விநாயகம், வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.
மானூரில் முதல்வர் பிறந்தநாள் விழா :
திண்டிவனம் அடுத்த மானூரில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவானது கொண்டாடப்பட்டது. மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மானூர் மன்னார்சாமி கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பழனி தலைமை தாங்கி திமுக கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் சரவணன், ஆதிகேசவன், ரவிக்குமார், கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை மாரி, மானுார் குமார், தேவதாஸ், திருமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் மகாலட்சுமி காளிதாஸ், வேலாயுதம், நாகஜோதி கணேஷ், விநாயகம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
காவேரிபாக்கத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா :
மேலும் காவேரிப்பாக்கம் 20வது வார்டு திமுக சார்பில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர் ரம்யா ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் பொது மக்களுக்கும் ஏழை எளியோருக்கும் இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார். இதேபோல் நத்தமேடு நரிக்குறவர் காலனியில் பிரியாணிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நந்தகுமார், வார்டு செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் திருஞானம், கதிரவன், சதீஷ், ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா |
Tindivanam News
திண்டிவனத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவானது நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டிவனம் நகராட்சியில் அதிமுக 4 இடங்களையும் திமுகவுக்கு 23 இடங்களையும் பெற்றன.
மேலும் பாமக இரண்டு இடங்களை கைப்பற்றியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்தை பெற்றது. மேலும் 3 சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
இதில் திமுக அதிருப்பதி வேட்பாளராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று பேரும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம் நகரம் மன்ற கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. 33 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவிற்காக நகர மன்ற கூட்ட அரங்கமானது புதுப்பிக்கப்பட்டது.
மரக்காணம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா
மரக்காணம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை தமிழகம் முழுவதும் ஏற்கும் விழாவானது இன்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி பெற்றனர். அதிமுகவில் 4 பேரும் பாமகவில் ஒருவரும் வெற்றி பெற்றனர். மேலும் சுயேட்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர்.
18-வார்டு கவின்சிலர்களும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். பேரூராட்சி ஆணையர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.