மொபைல் போன் டவர் அமைப்பதாக வாலிபரிடம் பணமோசடி | Vikravandi News

624

மொபைல் போன் டவர் அமைப்பதாக வாலிபரிடம் பணமோசடி

விழுப்புரம் மாவட்டம் Vikravandi அருகே மொபைல் போன் டவர் அமைப்பதாக கூறி முன் பணம் தருவதாக வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணமோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Vikravandi அடுத்த கொரலுார் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி மகன் ஆனந்த். இவரது மொபைல் போனுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 18ம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் தனியார் மொபைல் போன் டவர் அமைக்க முன்பணமாக 20 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக 25 ஆயிரம் ரூபாய் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்டதும் ஆனந்த் உரிய நபர்களை மொபைல் வழியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் மொபைல் ஃபோன் டவர் அமைக்க வருமானவரி, உபகரணங்கள் போன்றவற்றிற்கு முன்தொகை கட்டுமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி ஆனந்த் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 44 ஆயிரத்து 800 ரூபாயை உடனடியாக 4 தவணைகளாக அனுப்பியுள்ளார்.

பணத்தை பெற்ற பிறகு அந்த ஆனந்தை தொடர்பு கொள்ளவில்லை. ஆனந்திற்க்கு தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை அப்போதுதான்  உணர்ந்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

பில்லூர் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு 

கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பில்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஆசிரியர்களின் வருகை குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் மாணவ மாணவிகள் அதிக அளவில் பேருந்தில் பயணம் செய்கிறார்களா என்று கண்காணித்தார்.

அதன் பின்னர் கலெக்டர் மோகன் கூறுகையில் : பள்ளியில் மாணவிகளுக்கு போதிய அளவில் கழிப்பறை கட்டிடங்கள் கட்டித் தர கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மூலம் உடனடியாக எடுக்கப்படும்.

 

மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலான வகுப்ப

 

றைகள் கட்டித் தரப்படும். மேலும் குடிநீர் போதிய அளவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையான கல்வியை ஆர்வமுடன் கற்றுத்தரவும் சுகாதாரமான முறையில் பள்ளியை பராமரிக்கவும் வேண்டும் என அறிவுறுத்தினார்.

collector inspection in koliyanur school

 

ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம்:

திண்டிவனத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. புதுச்சேரி சாலையில் நடந்த இந்த ஊர்வலத்தை திண்டிவனம் எஎஸ்பி அபிஷேக் துவக்கி வைத்தார்.

மேலும் ஹெல்மெட் அணிவதற்கான அவசியத்தை குறித்து பேசினார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

பாரத சாரண சாரணிய இயக்க சோதனை தேர்வு 

விழுப்புரம் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கத்தில் 2019 20 காண மாநில ஆளுநர் விருதுக்கான சோதனை தேர்வு நடைபெற்றது.

தேர்வானது விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சாரண சாரணியர் 250 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். முகாமில் மாவட்டத்தில் கலை பயிற்சி பெற்ற பத்து சாரண ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

You might also like