Rain in Tamilnadu: தமிழகம், புதுச்சேரியில் 27 வரை மிதமான மழை

346

Rain in Tamilnadu: ‘தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மே, 27 வரை, மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் 15 செ.மீ., மழை பெய்துள்ளது.

 

அடுத்ததாக, அதே மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் 12; திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்துார், வெம்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு

அணைக்கட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

 

மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியில் இருந்து, ஆந்திரா கரை வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

இது மே, 27 வரை தொடர வாய்ப்புஉள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு, 45 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.

 

You might also like