Villupuram: விழுப்புரத்தில் சேறும், சகதியுமான சாலை பொதுமக்கள் அவதி

116

Villupuram: விழுப்புரம், வழுதரெட்டி 38வது வார்டு பகுதியில், ஈஸ்வரன் கோவில் மெயின் சாலை மற்றும் அதன் எதிரே பல்வேறு குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலைகள், நீண்டகாலமாக பராமரிக்காமல் இருப்பதால் மண் சாலை சிதைந்து, கழிவுநீர் வழிந்தோடி, சேறும், சகதியுமாக உள்ளது.

வெயில் காலத்திலும், அந்த சாலையில் கழிவுநீர் வழிந்தோடி சகதியாக உள்ளதால், பொது மக்கள், மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல், அவதிப்பட்டுச் செல்கின்றனர். அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், நீண்டகாலமாக சாலை சீரமைக்காமல் உள்ளது. பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் எதிரே பராமரிப்பின்றி உள்ள அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like