PMK: திண்டிவனத்தில் நகர பாமக அவசர பொதுக்குழு கூட்டம்

PMK: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள கே.ஆர்.எஸ். மகாலில், நேற்று காலை நடந்த கூட்டத்திற்கு, நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் ஜெராமன், சவுந்தரன், பொன்மொழி, ராஜேஷ், ரவி, மகளிர் அணி கவிதா, குமாரி ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் செந்தில், தினகரன், முருகன், சிலம்பரசன், கணேஷ், பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.