Nandan Canal Project Collector Survey : நந்தன் கால்வாய் திட்டம் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Nandan Canal Project Collector Survey : நந்தன் கால்வாய் திட்டம் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பனமலை ஏரியில் நந்தன் கால்வாய் திட்ட நீர் வரத்து குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். செஞ்சி அடுத்த மாதம்பூண்டி, சோகுப்பம், கணக் கன்குப்பம் ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி அடுத்த பனமலை ஊராட்சிகளில் நந்தன் கால்வாய் திட்டத்தின் மூலம் நீர் வரத்து வருவது குறித்து கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, வண்டல் மண் படிவுகளை துார்வாரி நீர் அதிகளவில் தேங்கிட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அவர், நிருபர் களிடம் கூறுகையில், ‘செஞ்சி, விக்கிரவாண்டி தாலுகாவில் நந்தன் கால்வாய் 12. 240 கி. மீ. , முதல் 37. 880 கி. மீ. , துாரம் முடிய 26 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் செல்வதை மேம்படுத்த வாய்க்காலை துார்வாரி, கான்கிரீட் லைனிங் அமைத்து, குறுக்கு கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளது.
நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளுக்கு நீர் பாசன வசதி ஏற்படுத்தி 5255. 10 ஏக்கர் நீர் பாசன வசதி பெறுகிறது. எனவே 22 ஏரிகள் நிரம்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்று பாசனம், போர்வெல் பாசனம் மூலம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுவதால் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்றார்.
பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் லாவண்யா உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.