Neet Exemption Letter Submission Program : நீட்’ விலக்கு அளிக்க கோரி கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி.

123

Neet Exemption Letter Submission Program : நீட்’ விலக்கு அளிக்க கோரி கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி.

 

திண்டிவனத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்ட தி. மு. க. , இளைஞரணி சார்பில் நடந்தது.

தாலுகா அலுவலகம் மற்றும் செஞ்சி ரோடு அங்காளம்மன் கோவில் எதிரில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் எம். எல். ஏ. , மாசிலாமணி கடிதம் அனுப்பும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், நகர்மன்ற சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, முன்னாள் நகர செயலாளர் கபிலன், நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர்கள் மலர்மன்னன், வசந்தா, முன்னாள் எம். எல். ஏ. , செந்தமிழ்செல்வன், கவுன்சிலர்கள் ரேகாநந்தகுமார், சின்னச்சாமி, பார்த்தீபன், லதா சாரங்கபாணி, பரணிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

You might also like