Bus pass : விழுப்புரம் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Bus pass : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் அல்லது பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் செய்திக்குறிப்பு:
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில், 1, 040 டவுன் பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு அரசு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு பாலிடெக்னிக், ஐ. டிஐ. , மாணவர்கள் என 5 லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வரை இந்த அரசு பஸ்களில் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகம் முழுதும் வரும் 10ம் தேதி, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, மாணவ, மாணவிகள் சீருடை அல்லது கடந்தாண்டு கொடுக்கப்பட்டுள்ள பஸ் பாசை காண்பித்தோ அல்லது பள்ளி, கல்லுாரிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.