Farmers : வானூர் பகுதி விவசாயிகளுக்கு அதிகாரியை அறிக்கை

Farmers : விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் எதிா்வரும் ஆடிப் பட்டத்துக்குத் தேவையான விதைப்பு நெல்கள் தயாா் நிலையில் உள்ளதாக வேளாண்துறை தெரிவித்தது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தெரிவித்திருப்பது: வானூா் வட்டாரத்தில் பரவலாக அனைத்துக் கிராமங்களிலும் அண்மையில் மழை பெய்துள்ளது.
இதைப் பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியைத் தொடங்கலாம். சம்பா பருவத்துக்குத் தேவையான நீண்ட கால நெல் ரகமான சிஆா்- 1009 சப்-1, மத்திய கால ரகமான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்ற நெல் ரகங்கள் வானூா் வட்டாரத்திலுள்ள கிளியனூா், பரங்கினி, திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
மேலும் நெல் மகசூலை அதிகரிக்கக் கூடிய இடுபொருள்களான சிங்க் சல்பேட், நெல் நுண்ணூட்ட உரம், ஜிப்சம் போன்ற இதர இடுபொருள்கள் மானிய விலையில் வழங்க தயாராக உள்ளன. எனவே விவசாயிகள் நெல் விதைகள் மற்றும் இடுபொருள்களை மானிய விலையில் பெற சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.