Mineral Water : மினரல் வாட்டர் கம்பெனிக்கு எதிர்ப்பு

Mineral Water : திண்டிவனம் 10வது வார்டில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மா. கம்யூ. , கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
திண்டிவனம் 10வது வார்டு ராமதாஸ் நகரில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனிக்கு கொடுத்து அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று காலை டி. வி. நகர் பகுதியில் மா. கம்யூ. , கட்சி சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. மா. கம்யூ. , நகர செயலாளர் குமரேசன் தலைமை தங்கினார். இதில் முன்னாள் எம். எல். ஏ. , ராமமூர்த்தி, மா. கம்யூ. , மாவட்ட செயலாளர் சுப்பரமணியன், நிர்வாகிகள் அறிவழகன், வட்ட செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கண்டன உரயைாற்றினர். தொடர்ந்து கட்சி சார்பில் டி. வி. நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.