Parandur Airport: பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசு ஒப்புதல்

Parandur Airport: பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒப்புதல் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரந்தூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதற்காக 5,476 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ள நிலையில், கொள்கை அளவிலான முதற்கட்ட ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.