விக்கிரவாண்டியில் பாமக நிர்வாகி மர்ம சாவு | Vikravandi News

848

விக்கிரவாண்டியில் பாமக நிர்வாகி மர்ம சாவு

Vikravandi News : விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் பாமக நிர்வாகி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரங்கியூர் கோரையாறு அருகே ஆண் சடலம் கிடப்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அத்தகவலை அடிப்படையாகக்கொண்டு போலீசார் நேரில் சென்று பார்த்த போது அந்த ஆண் சடலமானது சிறுவானூர் பழனிவேல் மகன் பாரதி என்பது தெரியவந்தது.

ஐடிஐ முடித்துள்ள இவர் பாமக கட்சியில் இணைந்து பாமக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக இருந்துள்ளார்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த இடத்தில் மதுவுடன் குவாட்டர் பாட்டில், பல்சர் பைக், சட்டை, பரோட்டா பார்சல், பாமக கரை வேட்டியுடன் பை ஒன்று கிடைத்துள்ளது.

இதனால் போலீசார் பாரதியின் இறப்பானது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

பாமக மாவட்ட இளைஞரணி துணை செயலாளரின் இறப்பானது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவமானது விக்கிரவாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மனைவியின் தற்கொலை வழக்கில் கணவருக்கு 3 ஆண்டு சிறை.

திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளத்தில் 2011ஆம் ஆண்டு பெண் ஒருவர் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கான தீர்ப்பானது தற்போது வந்துள்ளது.

திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் 2010 சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் சாந்திதேவியை திருமணம் செய்துள்ளார்.

திருமணம் நடந்தபின் தமிழ்மணி சென்னையில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு எந்த வேலையும் செய்யாமல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் 6 மாதங்களில் தமிழ்மணி சென்னையில் இருந்து கீழ்எடையாளத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்மணியின் பெற்றோர் சென்னை சென்று சாந்தி தேவியை அழைத்து வந்து தமிழ் மணியுடன் சேர்த்துவைக்குமாறு சாந்திதேவியின் பெற்றோரை கேட்டுள்ளனர்.

எனவே 2011 மே 29ல் சாந்திதேவியை அவரது பெற்றோர் கீழ்எடையாளத்திலுள்ள அவரது கணவர் தமிழ்மணியின் வீட்டிற்கு வந்து விட்டு சென்றுள்ளனர்.

varathadchanai kodumai

அன்று இரவு தமிழ்மணிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி இறந்துவிட்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. சாந்திதேவியின் பெற்றோர் போலீசில் இதுகுறித்து கணவர் தமிழ்மணி, மாமியார், மாமனார், சகோதரர் என நான்கு பேர் மீது புகார் அளித்துள்ளார்.

போலீசார் தமிழ்மணி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சாந்தி தேவி வரதட்சணை கொடுமையால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கானது விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி குற்றம் சாட்டப்பட்ட தமிழ் மணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற மூவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

 

விக்கிரவாண்டி அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் சாவு | Vikravandi News

Vikravandi News : விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து வேலூருக்கு சரக்கு ரயிலானது அதிகாலை புறப்பட்டது.

இந்த ரயிலானது விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி வெங்கடேசபுரம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like