Chess Champion praggnanandhaa: சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடர்; சாம்பியன் பட்டம் வென்று அசத்திய பிரக்ஞானந்தா

Chess Champion praggnanandhaa: ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இத்தொடரில் இந்தியாவின் சார்பில் டி. குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவை போல மற்ற வீரர்களான அலிரேசா பிருஸ்ஜா, மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் ஆகியோரும் திறமையை வெளிப்படுத்தினர்.
3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் எடுத்து இருந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் மாக்சிம் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவருக்கு கோப்பையுடன் ரூ.65 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. இந்த தொடரில் டி.குகேஷ் 6வது இடம்பிடித்தார்.
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரக்ஞானந்தாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.