Mundiyampakkam இறந்த பெண்ணிற்காக சாலை மறியல்

Mundiyampakkam | இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்
Mundiyampakkam : முண்டியம்பாக்கத்தில் பெண்ணின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் அவர்கள் பா. ஜ. , நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இவருக்கும் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சோரக்குப்பத்தை சேர்ந்த வேல் முருகன் மகளுக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் குடும்ப தகராரினால் நேற்று முன்தினம் அந்த பெண் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறந்த அப்பெண்ணின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்து பெண்ணின் இறப்பிற்கு காரணமானர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று மாலை 5: 00 மணியளவில் மருத்துவ மனை எதிரே உள்ள சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை நெறிசல்
அதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் விக்கிரவாண்டி போலீசார் பேச்சுவார்தை நடத்தியதை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக ஏற்பட்ட சாலை நெறிசலை காவல் துறையினர் சரிசெய்தனர்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.