Melmalayanur : சிறுதலைப்பூண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

148

Melmalayanur : மேல்மலையனுார் தாலுகா, சிறுதலைப்பூண்டி கிராமத்தில் நீர்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று(செப்.23) தாசில்தார் தனலட்சுமி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் 16 வீடுகள், வேர்க்கடலை சாகுபடி செய்த நிலங்கள் அகற்றப்பட்டன. ஏ. டி. எஸ். பி. தினகரன், செஞ்சி டி. எஸ். பி. செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் நேரு, பி. டி. ஓ. க்கள் சிவசண்முகம், சையத் முகமத் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

You might also like